
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மைதானத்தில் இருந்த வீரர்கள், சியர்லீடர்கள் மற்றும் 23,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பஞ்சாப் அணி 10.1 ஓவரில் 122 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
“Very very scary” – Cheer leader’s SHOCKING video from Punjab Kings Vs Delhi Capitals IPL match in Dharamshala. pic.twitter.com/S830aDKer3
— Manobala Vijayabalan (@ManobalaV) May 8, 2025
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு சியர்லீடர் பதிவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது. “எல்லோரும் குண்டுகள் வருகின்றன என்று கத்தினார்கள்… ரொம்ப பயமா இருக்கு… இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன்” என அந்த சியர்லீடர் உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.