தமிழ் சினிமாவில் 40 வருடத்திற்கும் மேலாக கோலோச்சி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் . இவர் நடிப்பின் வெளிவந்த படம் வேட்டையன் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் தற்போது கூலி படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து ஜெயிலர்-2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து பாரதிராஜா அவருடைய எழுபதாவது பிறந்த நாளில் பேசிய விஷயம் தற்போது திடீரென்று ட்ரெண்ட் ஆகியுள்ளது.

அதில் நான் இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்காக வரவில்லை. ஒரு சூப்பர் மனிதரான ரஜினிக்காக வந்துள்ளேன் .ரஜினிகாந்த் ஒரு சிறுவனை கூட தரக்குறைவாக பேசியது கிடையாது. கோவத்தில் கூட அடுத்தவரை காயப்படுத்த மாட்டார்.  ரஜினிக்கும் எனக்கும் பல முரண்பாடுகள் வந்திருக்கிறது. பலமுறை நான் அவரை தாக்கி பேசி இருக்கிறேன். ஆனால் எதையும் அவர் மனதில் வைத்துக் கொண்டது கிடையாது என்று கூறியுள்ளார்.