
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தி கோட் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தன்னுடைய கடைசி படத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் நிலையில் இது விவசாய பின்னணியில் உருவாகும் அரசியல் கதை கொண்ட படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் டப்பிங் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை குடியரசு தின விழாவை முன்னிட்டு தளபதி 69 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபட இருப்பதால் அதற்கு தகுந்தார் போன்று படம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளைய தீர்ப்பு என்று படத்திற்கு தலைப்பு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் நாளைய தீர்ப்பு என்ற தலைப்பில் ஒரு படம் வெளிவந்துள்ளது. மேடம் நாளை பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாவது தளபதி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Update oda vandhurkom 🤗
69% completed ███░░#Thalapathy69FirstLookOnJan26 🔥#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu… pic.twitter.com/FA2MbAjdAY— KVN Productions (@KvnProductions) January 24, 2025