முன்னாள் அமைச்சர் பாபா சித்தி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குருமல் சிங், தர்மராஜ் காசியப் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், யூடியூப் பார்த்து துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி எடுத்ததாக கூறியுள்ளனர். பாபா சித்தி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.