யூடியூப் சேனலை உருவாக்கி, அதன்மூலம் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் யூடியூப் சேனல் நடத்துவது எப்படி என்பது குறித்து இலவச பயிற்சியும் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வகுப்புகள் சென்னையில், ஜன.29 முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புக்கு ₹4,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.editn.in இணையதளத்தில் அறியலாம்