தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வெயில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து நான்கடி டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பம் நிலவும். ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று முதல் ஆகஸ்ட் 1 வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.