தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் எஸ்.ஜே சூர்யா. இவர் குஷி மற்றும் வாலி போன்ற படங்களை இயக்கியுள்ள நிலையில் வியாபாரி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே சூர்யா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தனக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது என கூறியுள்ளார். அதோடு கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் ஏற்பட்ட சந்திப்பின்போது நடந்த ஒரு சுவாரசிய தகவலையும் பகிர்ந்துள்ளார். அதாவது எஸ்ஜே சூர்யா ஹைதராபாத்துக்கு ஒரு ஷூட்டிங்க்காக சென்றுள்ளார்.

அப்போது கிரிக்கெட் வீரர் நடராஜனும் அவருடைய மனைவி மற்றும் மகளும் எதார்த்தமாக நடிகர் எஸ்.ஜே சூர்யாவை சந்தித்துள்ளனர். அப்போது அவரிடம் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமா என்ன நடராஜன் கேட்ட நிலையில், அதற்கு எஸ்.ஜே சூர்யா ஒப்புக்கொண்டார். பின்னர் அவருடன் சேர்ந்து நடராஜன் தன் குடும்பத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதன் பிறகு எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர்கள் நாங்களும் செல்பி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் என்னுடன் தானே இருக்கிறீர்கள் உங்களுக்கு எதற்கு செல்ஃபி என்று கேட்டுள்ளார்.

உடனே அவர்கள் உங்களுடன் இல்லை நாங்கள் நடராஜன் சாருடன் செல்பி எடுக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு அவர்களிடம் எஸ்.ஜே சூர்யா அவர் யார் என கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இவர் இந்திய கிரிக்கெட் வீரர் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டவுடன் நடராஜனிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே சூர்யா அவருடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவருடைய உதவியாளர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும் எஸ் ஜே சூர்யா கொடுத்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது