ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக இருக்கும் காவ்யா மாறன், தற்போது ரசிகர்களிடையே ஒரு தனி கவனம் பெற்றுள்ள முக்கியமான முகமாக திகழ்கிறார். அணியின் போட்டிகளை நேரில் வந்து உற்சாகமாக அனுபவிப்பதோடு, அவரது facial expressions பலமுறை வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. ஏலத்தில் வீரர்கள் தேர்வில் அவர் எடுத்த தீர்மானங்கள் மற்றும் வியூகங்கள் பலராலும் பாராட்டப்பட்டுள்ளன. அணியை நிர்வகிக்கும் அவருடைய தெளிவான அணுகுமுறை IPL ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார், அணியில் இருந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். “காவ்யா மாறன் ஒரு சிறந்த உரிமையாளர். அவர் எப்போதும் வீரர்களை ஆதரிப்பதிலேயே முன்நின்றார். நாங்கள் ஒரு போட்டியில் தோற்றாலும், அவர் எப்போதும் எங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறை கூறியதில்லை,” என பு தெரிவித்தார். அவரது அமைதியான ஆதரவும், அணி மேலாண்மையில் காட்டும் நம்பிக்கையும் வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அவர் கூறினார்.

புவனேஸ்வர் குமாரின் இந்தக் கருத்துகள் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களில் அவரின் பேட்டியின் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், காவ்யா மாறன் ஒரு தொழில்முறை நிர்வாகியாக மட்டுமல்ல, உணர்வுபூர்வமான அணியின் பொறுப்பாளர் என்றும், அணியில் உள்ள ஒற்றுமைக்கு ஒரு காரணமாகவும் அவரது பங்களிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.