திரை உலகின் பிரபல நடிகையான மாளவிகா மோகனன் மலையாளம், தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார். அதோடு தெலுங்கில் தி ராஜா ஷாப் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் மலையாளத் திரையுலகின் பிரபல நடிகர் மோகன்லால் நடித்து இயக்குனர் சத்யன் அந்திக்காட் இயக்கும் ஹிருதயபூர்வம் படத்தில் மாளவிகா மோகன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதியானால் சீனியர் ஹீரோவுடன் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.