டெல்லியில் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி  கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், சர்க்கரை பாகு கழிவு (மொலாசஸ்) மீதான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பின்பு பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மொலாசஸ் மீதான வரி குறைப்பால் சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் பணம் மிச்சமாகும். மேலும் இதனால் கால்நடை தீவனங்களின் விலை குறைந்து விவசாயிகள் பயனடைவார்கள்” என்றும் கூறியுள்ளார்.