இந்த ஆண்டின் சந்திர கிரகணம் வருகின்ற மே 5-ம் தேதி புத்த பூர்ணிமா நாளில் நிகழ்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாக நிகழ உள்ளதால் உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். ஆனால் இது இந்தியாவில் தென்படாது. இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மே ஐந்தாம் தேதி இரவு 8.44 மணிக்கு தொடங்கி மே 6ஆம் தேதி அதிகாலை 1.1 மணிக்கு நிறைவடையும். மேலும் சந்திர கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்றும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் யாரும் வெளியே வரக்கூடாது எனவும் பல ஜோதிடர்கள் அறிவுறுத்தினாலும் அறிவியல் பூர்வமாக இப்படி ஒரு தகவல் இல்லை.