
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பயணிகளுக்காக மெட்ரோ நிர்வாகம் பல சலுகைகளையும் வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டுவரப்பட உள்ளது. அதனால் மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களுக்கு அருகே மக்கள் இலவசமாக பயணம் செய்யும் இ ஆட்டோ வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய திட்டம் மூலமாக மெட்ரோவில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் பயணிக்க முடியும். அதாவது இந்த வசதியானது பண்டிகை நாட்களில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.