
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷேன் நிகாம். இவர் கிஸ்மத் என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கும்பலங்கி, நைட்ஸ், ஆர்டிஎக்ஸ் போன்ற படங்கள் மூலம் வெற்றியை கண்டுள்ளார். இந்நிலையில் ஷேக் நிகாம் “மெட்ராஸ் காரன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். அதோடு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நிஹாரிகா கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, பாண்டியராஜன், கருணாஸ்,கொனி டேலா போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மெட்ராஸ்காரன் படத்தின் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் இணையத்தில் வைரல் ஆகி வரும் இந்த டீசர் ஷேன் நிகாம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதுபெற்றுள்ளது.