மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்த வருகிறார். தமிழ் படத்தில் நடிப்பதற்கும் இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வருகிறார். திருப்பதி ஏழுமலையான் மீது அதீத பக்தி கொண்ட ஜான்வி கபூர் தனது தாயின் பிறந்தநாள், நினைவு நாள் என அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதோடு திருப்பதியில் குடியேறுவதற்கும் விருப்பம் உள்ளதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் திருமணத்திற்கு பிறகு எனது கணவருடன் திருப்பதியில் குடியமர வேண்டும். அங்கு ஒரு சாதாரண பெண்ணாக எனது வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்.

வாழை இலையில் உணவருந்தி, தினம் தினம் கோவிந்த நாம சங்கீர்த்தனம் கேட்டுக்கொண்டு, மூன்று குழந்தைகளை பெற்றுக் கொண்டு திருப்பதியிலேயே அமைதியாக வாழ வேண்டும். அதேபோன்று ஏழுமலையான் கோவில் சம்பிரதாயப்படி எனது கணவரை வேஷ்டி அணிய சொல்லுவேன்” எனக்கு கூறியுள்ளார்.