இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் sbi வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டமான அம்ரித் கலாஷ் திட்டம் மார்ச் 31ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. 400 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதம், பிறருக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக டிசம்பர் 31ஆம் தேதி வரை இறுதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆன்லைன் பேங்கிங் அல்லது யோனா ஆப் மூலம் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.