பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வாயிலாக பல வசதிகள் செய்து தரப்படுகிறது. இப்போது மாநில அரசிடமிருந்து மேலும் ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் பயண டிக்கெட் கட்டணத்தை மாநில அரசானது குறைத்திருக்கிறது. ஆகவே இனிமேல் பயணத்தின் போது பாதி கட்டணத்தை மட்டுமே செலுத்தவேண்டும். இந்த சிறப்பான வசதியை மகாராஷ்டிரா, ஹரியானா அரசு துவங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் மகிளா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்குரிய பேருந்து டிக்கெட் கட்டணம் 50% குறைக்கப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் மூத்த குடிமக்களுக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதில் 65 -75 வயதுக்குட்பட்ட மூத்தக்குடிமக்கள் பயன் பெறுகின்றனர். மேலும் 75 வயதிற்கு அதிகமான மூத்தக்குடிமக்களுக்கு பேருந்து சேவை இலவசமாக மாநில அரசு வழங்குகிறது. இத்தள்ளுபடி பேருந்து கட்டணத்தில் மட்டுமே கிடைக்கும்.