இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சி அடைந்திருப்பதால் இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம். அரசு அலுவலகங்களுக்கு வீணாக அலைய வேண்டியதில்லை. அந்த வகையில் முதியோர் உதவித்தொகைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

முதியோர் உதவித்தொகைக்கு tnega.tn.gov.in என்ற இணையத்தில் Citizen Services-ஐ கிளிக் செய்து, National Old Age Pension Scheme-ஐ தேர்வு செய்யவும். பிறகு ஆவணங்களை பதிவு செய்து, ரெஜிஸ்டர் CAN ஆப்சனை தேர்வு செய்யவும். அதில் பெயர், முகவரி ஆகிய விவரங்களை பதிவு செய்தால் போனுக்கு ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்து, வங்கி கணக்கு, ஆதார், புகைப்படத்தை பதிவு செய்து கட்டணம் செலுத்தினால் ஒப்புகை சீட்டு கிடைக்கும். தாசில்தார் ஒப்புதலுக்கு பின் உதவித்தொகை கிடைக்கும்.