கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு பகுதியில் நிசார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது இபாத் என்ற 8 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென பாட்டில் மூடி தொண்டையில் மாட்டிக் கொண்டது. உடனடியாக பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

ஆனாலும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் அவருடைய முதல் குழந்தையும் இதே போன்று பாட்டில் மூடி தொண்டையில் சிக்கி தான் உயிரிழந்தது. தற்போது அவருடைய இரண்டாவது குழந்தையும் பாட்டில் மூடி தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளது. மேலும் இதனால் சந்தேகம் அடைந்த நிசார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.