இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருமான கிரேக் சேப்பல், வரவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில்  இந்தியா விராட் கோலியை பெரிதும் நம்பியிருக்கும் என்று கருதுகிறார்.

2004க்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் தொடர் வெற்றியை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா, பிப்ரவரி 9-ம் தேதி நாக்பூரில் தொடங்கி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரே ஒரு பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்டில் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2015 இல் பார்டர்-கவாஸ்கர் டிராபியை தங்களது சொந்த மண்ணில் தொடரை 2-0 என வென்றனர். அதன்பின் 2017,2019, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியே வென்றுள்ளது..

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருமான கிரெக் சேப்பல் கூறியதாவது, “ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்ல முடியும். ரிஷ்பா பந்த், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்களுக்கு காயம்  ஏற்பட்டுள்ளதால் சொந்த மண்ணில் இந்தியா மிகவும் பாதிக்கப்படும். அவர்கள் விராட் கோலியை பெரிதும் நம்பியிருப்பார்கள்.” என்றார்..

மேலும் இந்திய மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து பேச்சாளர்கள் விரைவாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். சுழல் பந்து வீச்சுக்கு ஏற்றவாறு ஆடுகளங்கள் அமைந்திருக்கும். எனவே ஆஷ்டன் அகருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என நான் எதிர்பார்க்கிறேன். இந்திய தொடரில் வெல்வதற்கு நல்ல திட்டம், பொறுமை மற்றும் விடா முயற்சி அவசியம் என்று தெரிவித்தார்..