தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக முதலீடுகளை தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் குவிப்பதன் மூலமாக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அரசு தெரிவித்தது.

இதற்காக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை அரசு அறிவித்தது. இந்த நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் எதிரொளியாக தமிழக மின் துறையில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் 20,000 மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாநாட்டின் மூலமாக தமிழகத்திற்கு மொத்தம் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ விவரமும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.