தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் சத்யராஜ், நாகார்ஜுனா மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட  பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். அதாவது ஜெய்லர் படத்தில் நடிகை தமன்னா காவலா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிலையில் அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூலி படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.