தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பேரவையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 13 புதிய அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. அதன்படி கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு 500 பயனாளிகளுக்கு சுமார் 4.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை இரண்டு மடங்களாக உயர்த்துவதற்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலி பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்புவதற்கு ஆள்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.