தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் விதமாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் கடந்த ஆட்சியில் நடைமுறையில் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் புதுமை திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற உயர்கல்வி சேரும் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால் இனி தலைக்கு தங்கம் திட்டம் செயல்படாது, அதற்கு பதிலாக புதுமைப்பெண் திட்டம் நடைமுறையில் இருக்கும்.

மேலும் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களும் உள்ளது என அரசு தெரிவித்துள்ளது. அதாவது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம், ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் நிதி உதவி திட்டம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் போன்ற பல திட்டங்கள் அமலில் உள்ளதாகவும் இதன் கீழ் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்து பெண்கள் பயன்படலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.