கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புளிக்கப்பரம்பு என்ற பகுதியில் சுவாமிநாதன் (72) பிரேம குமாரி (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுவாமிநாதன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மகன் பிரதீப் குமார் குஜராத்தில் ராணுவ பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஜிஷா (36) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ஜிஷாவுக்கு சதானந்தன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அதன் பிறகு சதானந்தன் ஜிஷா வீட்டின் அருகே ஒரு வீடு அமர்த்தினார்.

அங்கு அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் இந்த விவகாரம் ஜிஷாவின் மாமனார் மாமியாருக்கு தெரியவந்துள்ளது. இதை அவர்கள் கண்டித்ததால் ஜிஷா மற்றும் சதானந்தன் இருவரையும் கொடூரமாக கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஜிஷா மற்றும் சதானந்தன் இருவரும்  கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பாலக்காடு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி ஜிஷாவுக்கு ஆயுள் தண்டனையும் சதானந்தனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.