மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள எம்ஐடிசி தொழிற்பேட்டையில் ஒரு காகித தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு ராம் லட்சுமண ராவத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இங்கு அவருடைய மனைவி டுவிங்கிளும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் தங்களுடைய 3 வயது மகளுடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளில் மாலை நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்தில் டுவிங்கிள் தன்னுடைய மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் ஒரு மரத்தின் அடியில் தன் குழந்தையை வீசி கொலை செய்துள்ளார். பின்னர் தன் குழந்தையின் சடத்தை தூக்கிக்கொண்டு 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களிடம் டுவிங்கில் நடந்ததை கூறினார். அதைக் கேட்ட காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதைத் தொடர்ந்து டுங்கிள் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.