புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முக கவசம் கட்டாயம். நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்.

இருமல் மற்றும் சுவாச பாதிப்பு ஆகியவை இருந்தால் உடனே ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சீனாவில் புதிய வகையான வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்று மற்றும் சுவாச பாதிப்புகளை கண்காணிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.