இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. இதனால் மக்களின் ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து சேமிப்பு திட்டங்களை தொடங்குகின்றன.

அதன்படி அஞ்சல மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் மொத்த டெபாசிட் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும். இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் ஒன்பது லட்சம் ரூபாய் வரையிலும் கூட்டுக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரையிலும் டெபாசிட் செய்யலாம். இதில் ஏழு புள்ளி நான்கு சதவீதம் வட்டி கிடைப்பதால் உங்கள் குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து 15 லட்சம் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் 9250 வட்டியாக பெறலாம்