சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலனுடன் தனியாக இருந்த மாணவியை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடை வியாபாரியான ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்வி கற்க சொல்லும் இடத்தில் காதலியுங்கள் மறைவிடம் செல்லுங்கள் என பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா? என குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவர் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கான்ஸ்டபிளை போட்டா பாதுகாப்பு தர முடியும்? இதில் அரசை குறை கூறுவது நியாயமே இல்லை என கூறியுள்ளார்.