தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த கல்வி ஆண்டில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பு கல்வியாண்டிற்கான சிறார் திரைப்படங்களை திரையிடுதல் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சில வழிகாட்டுதல்களை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மாதத்தின் முதல் வாரத்தில் திரையிடப்படும் படம் குறித்து எமிஸ் இணையதளம் ம் வாயிலாக தலைமை ஆசிரியர்களுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அதுகுறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்  முன்னுரை ஒன்றை வழங்க வேண்டும். படம் முடிந்த பிறகு ஐந்து மாணவர்களை அழைத்து படம் குறித்து கருத்துக்களை கேட்க வேண்டும். மேலும் மாணவர்களை படம் தொடர்பான படைப்புகளை ஆவணப்படுத்த கூறி அவற்றை சிறார் இதழ்களில் இடம்பெறவைத்து அதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் 25 பேரை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.