கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் மங்கையர்கரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் நைனார்பாளையம் கிராமத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற ஒருவர் மளிகை பொருட்களை வாங்கினார்.

இதனையடுத்து அந்த பொருட்களை எடுத்துச் செல்லாமல் 1,400 ரூபாய் விலைக்கு ஒரு அரிசி மூட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு எனக்கு 2000 ரூபாய் தாருங்கள். வீட்டில் அரிசி மூட்டையை வைத்துவிட்டு மளிகை பொருட்களை வாங்க வரும் போது மொத்தமாக அனைத்து பணத்தையும் சேர்த்து தருகிறேன் என தெரிவித்தார்.

இதனை நம்பி மங்கையர்கரசி அவரிடம் 2000 ரூபாய் பணத்தை கொடுத்தார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மங்கையர்கரசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையில் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.