டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு கபில் தேவ்  உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது என 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கபில் தேவ் உள்ளிட்ட வீரர்கள் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கபில் தேவ் உள்ளிட்ட வீரர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களை நடத்தப்படும் விதம் கவலையும், மன வேதனையும் அளிக்கிறது. எங்களது சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்பட்டுள்ளனர். மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை தூக்கி எறிவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு நிறைவேற்ற வேண்டும்

தேசத்திற்கு பெருமை தேடித்தந்த பதக்கங்களை தூக்கி எறிவது போன்ற முடிவை இனி எடுக்க வேண்டாம்.  தொடர் உழைப்பு, அர்ப்பணிப்பு முயற்சிகளால் வென்ற பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம். மல்யுத்த வீரர்களின் கோரிக்கை கேட்கப்பட்டு விரைவில் சரி செய்யப்படும் என்று நம்புகிறோம். போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மல்யுத்த வீரர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.