
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் கவிஞர் நந்தலாலா (69)நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவின் காரணமாக உயரிழந்தார். இவர் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர் சங்கத் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர் பெங்களூருவில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அப்போது அவருடன் அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.