தமிழ் சினிமாவில் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷீகான் ஹூசைனி. இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி கராத்தே மாஸ்டராகவும் பல மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ஷீகான் ஹூசைனி தற்போது ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தினசரி இரண்டு யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மரணப்படுக்கையில் இருக்கும் ஷீகான் ஹூசைனி தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி மருத்துவம் உடற்கூறியியல் மற்றும் ஆராய்ச்சிக்காக தன்னுடைய உடலை தானம் செய்வதாக அவர் அறிவித்துள்ள நிலையில், நான் இறந்த மூன்று நாட்களுக்கு பிறகு என்னுடைய உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு வழங்குங்குங்குங்கள் என்று கூறியுள்ளார்.அதோடு தன்னுடைய இதயத்தை கராத்தே மற்றும் வில்வித்தை மாணவர்களிடம் ஒப்படையுங்கள் என்றும் கூறியுள்ளார். இதை படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே வந்து என்னிடம் கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மரணப்படுக்கையிலும் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்த நடிகரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.