நடிகர் ஜெயம் ரவி காதல் படத்தில் அறிமுகம் ஆகி சாக்லேட் பாயாக வலம் வந்து பல அதிரடி ஆகஷன் ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். ஜெயம் படத்தின் மூலமாகத்தான் இவருக்கு ஜெயம் ரவி என்ற பெயர் வந்தது. இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக தொடர்ந்து இணையத்தில் செய்திகள் வெளிவந்து கொண்டே உள்ளது. திடீரென ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஆர்த்தி நீக்கி இருக்கிறார்.

எனவே ஜெயம் ரவியுடன் விவாகரத்தை ஆர்த்தி உறுதி செய்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்த்தி, ஜெயம் ரவியின் முதல் படமான ‘ஜெயம்’ படத்தின் 20 ஆண்டுகள் முடிந்தத போஸ்டரை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.