மும்பைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது தாயிடம் பணம் வாங்கிக் கொண்டு கடையில் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்தது உறுதியானது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விஷால் காவ்லி என்பவரை கைது செய்தனர். சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இந்த சம்பவத்தை வெளியே சொல்லி விடுவாள் என்ற பயத்தில் விஷால் கொலை செய்துள்ளார். பிறகு விஷால் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். சிறுமியின் உடலை அப்புறப்படுத்த உதவவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் ஆட்டோவில் சிறுமியின் உடலை எடுத்துச் சென்று அப்புறப்படுத்தியது தெரியவந்தது.