
உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் சீமா என்ற பெண் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்தார். கடந்த சில மாதங்கள் கழித்து சீமா தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலதிபர் குடும்பத்தினர் சீமாவிற்கு 75 லட்ச ரூபாய் கொடுத்தனர். இதனையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு குருகிராம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை சீமா திருமணம் செய்து அவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்து பத்து லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டார்.
கடந்த ஆண்டு ஜெய்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை சீமா திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து அவரது வீட்டில் இருந்த 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சீமா தப்பிவிட்டார். இதுகுறித்து தொழிலதிபரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சீமா மேட்ரிமோனியில் விவாகரத்தான அல்லது மனைவியை இழந்த நபர்களை தேடி கண்டுபிடித்துள்ளார். அதன் பிறகு அவர்களை திருமணம் செய்து இதுவரை மொத்தமாக 1.25 கோடி ரூபாய் வரை பறித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.