பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ‘கணேஷ் மத் மந்திர்’ கோவிலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு, இஸ்லாமியக் கலைஞர் ஒருவர் தனது கைவண்ணத்தால் வண்ணம் தீட்டி அசத்தியுள்ளார். இந்த நிகழ்வு ‘கலைக்கும் பக்திக்கும் மதமில்லை’ என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

கராச்சியில் வசிக்கும் மராட்டிய குடும்பங்களின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. விழாவிற்காகக் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைக்கு அங்குள்ள முஸ்லிம் கலைஞர் ஒருவர் மிகவும் நேர்த்தியாக வண்ணம் தீட்டி அழகுபடுத்தியுள்ளார்.

தலையில் பாரம்பரியத் தொப்பியுடன் காட்சி அளிக்கும் அந்தப் கலைஞர், வெள்ளை நிற விநாயகர் சிலைக்கு ஸ்பிரே பெயிண்ட் மற்றும் பிரஷ் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்து வண்ணமயமாக மாற்றியுள்ளார்.

கராச்சியைச் சேர்ந்த அமர் பிரகாஷ் என்ற மராட்டியர் இந்த நெகிழ்ச்சியான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, பலரின் கவனத்தையும் ஈர்த்து நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by A M A R (@theamarparkash)

“>

மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தையும் கலையையும் போற்றும் இந்தச் சம்பவம், உலகம் முழுவதும் உள்ள இணையதளவாசிகளிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.