மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள் உள்ளது.

ஒவ்வொரு வருடமும், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சில நாள்களுக்கு முன்பு இந்த பாரம்பரியமான ‘அல்வா கிண்டும்’ நிகழ்ச்சி நடக்கும். இந்நிகழ்ச்சிக்கு பின், ஊழியர்கள் பட்ஜெட் தாக்கல் முடியும் வரை அங்கேயே தங்க வேண்டும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்.1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி, பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.