மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வுகள் கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட போதும் நிலுவைத் தொகைகள் வழங்கப்படாமல் உள்ளது. இதனை அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.

இந்த நிலையில் 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதன் மூலம் ஒரு கோடி அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது 2.60 ஆக உள்ள பிட்மென்ட் காரணி மூன்று மடங்காக அதிகரிக்கவும் உள்ளது. இவை இரண்டும் அமலாகும் போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய அடிப்படை சம்பளத்தில் அதிக பலன்களை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.