இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகல விலைப்படி உயர்வு சமீபத்தில் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது 46 சதவீதம் வழங்கப்படும் நிலையில் வருகின்ற ஜனவரி மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வு நான்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5% அகலவிலைப்படி மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள்.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது . தற்போது 2.60 மடங்கு பிட்மென்ட் காரணி பலனை மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வரும் நிலையில் 3.0 மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான இரண்டு அறிவிப்புகளும் வெளியாகும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் அதிகரிக்கும். இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.