மேக் இன் இந்தியா திட்டம் மூலம் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் அதிவேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு உதவுகிறது. முதற்கட்டமாக வட மாநிலங்களில் மற்றும் முக்கிய தலைநகர பகுதிகளில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது . தமிழகத்தில் இதுவரையிலும் சென்னை முதல் நெல்லை வரை வந்தேபாரத் ரயில் சேவை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இது நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மதுரை முதல் பெங்களூர் வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

இதனால் மதுரை முதல் பெங்களூர் வந்தேபரத் ரயிலில்  ஆறு மணி நேரத்தில் 432 கிலோமீட்டர் தூரத்தை கடக்க இருக்கிறது. மேலும் மதுரை ,கரூர் , சேலம், தர்மபுரி ஓசூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்கள் மட்டும் நின்று  செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று பயண கட்டணம் அதிகமாக இருந்தாலும் அவசரப் பணிகளை மேற்கொள்வதற்கு மிகவும் உதவியாக இருப்பதால் இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.