உத்தரபிரதேச மாநிலம் நொயிடாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் மணமகன் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மணப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு இப்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் கூறி மணமகன் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளனர்.

மணமகளின் வயிறு பெரிதாக இருந்ததற்கு அவரது பெற்றோர் கிட்னியில் இருந்த கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாகவே இவ்வாறு இருப்பதாக காரணம் கூறியுள்ளனர். ஆனால் குடும்பமே சேர்ந்து ஏமாற்றி திருமணத்தை நடத்தி இருப்பதால் மணமகன் வீட்டார் கோபத்தில் அந்த பெண்ணை மணமகள் விட்டாரிடம் அழைத்து செல்ல கூறிவிட்டனர். திருமணமான மறுநாளே குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.