மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 4.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 520 மீட்டர் நீளமுள்ள பாதை ஹூக்லி நதிக்கு அடியில் செல்கின்றது. இதற்காக நதிக்கு அடியில் 32 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையின் ஆழம், வளைவு, மண்ணின் தன்மை மற்றும் வடிவமைப்பு காரணமாக இந்த வழித்தடம் பொறியியல் அதிசயமாக கருதப்படுகின்றது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி கடந்த ஆறாம் தேதி தொடங்கி வைத்த நிலையில் இந்த ரயில் சேவை மார்ச் 15 நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.