பொதுவாக வங்கிகளுக்கு நாள்தோறும் வாடிக்கையாளர்கள் செல்வார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக வங்கியில் தினசரி மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படாது என்பதால் அன்றைய தினம் வாடிக்கையாளருக்கு சற்று சிரமமாக இருக்கும். இதனால் விடுமுறைகளை கணக்கில் கொண்டு முன்கூட்டியே வங்கி பயன்பாடுகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இன்று ஜூன் மாதம் என்பதால் இந்த மாதத்திற்கான மொத்த வங்கி விடுமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது.

அதன்படி ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை விடுமுறை. ஜூன் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ்ஜியின் தியாகத் தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை.

ஜூன் 14ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. ஜூன் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. ஜூன் 27ஆம் தேதி வெள்ளி ரத யாத்திரையை முன்னிட்டு ஒடிசா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விடுமுறை.

ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. ஜூன் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஜூன் 30-ம் தேதி ரெம்நோ-நி-ஐ முன்னிட்டு மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை.

மேலும் மொத்தமாக 13 நாட்கள் விடுமுறை வரும் நிலையில் இந்த விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு முன்கூட்டியே வங்கிப் பயனர்கள் வங்கி செயல்பாடுகளை முடித்துக் கொள்ள வேண்டும். வங்கிகளுக்கு விடுமுறையாக இருந்தாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் நெட் பேங்கிங் போன்றவைகள் வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.