கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.  அந்தவகையில் வெங்காயம் விலையும் உயருமா என்ற குழப்பத்தில் மக்கள் இருந் நிலையில் 2023-24 சீசனில் 3 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைத்து பராமரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஆண்டில் வெங்காயத்தின் கொள்முதல் 3 லட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் நலன் காக்க சில்லறை விற்பனையில் விலை உயராமல் சமநிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.” என கூறினார்.