நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் கோதுமை போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுகள் மூலமாக பொதுமக்கள் மிகுந்த பயன் பெற்று வருகிறார்கள். அதே சமயத்தில் சில தகுதி இல்லாத நபர்களும் ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் பெறுவது தெரிய வந்ததால் இகேஒய்சி அப்டேட்டை முடிக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியில்லாத ரேஷன் அட்டைதாரர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் நீக்கப்படுவார்கள். இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டு அவசியம். அந்த ஸ்மார்ட் கார்டை வைத்த நாடு முழுவதும் எந்த ஒரு ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த வசதி புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் தற்போது மத்திய அரசு ரேஷன் கார்டு இல்லாமலேயே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக RATION 2.0 என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை உங்களுடைய போனில் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு ஆதார் அட்டை நம்பரை உள்ளீடு செய்தால் ஓடிபி கேட்கும். பின்னர் அந்த ஓடிபி நண்பரை கொடுத்தால் உங்களுடைய ‌ ஸ்மார்ட் ரேஷன் கார்டு அதில் காட்டும். இதை ரேஷன் கடைகளில் காண்பித்த பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். மேலும் இது பேரிடர் போன்ற காலங்களில் ரேஷன் அட்டைகள் தொலைந்து விட்டால் பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.