தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள்  5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அரசு நிர்ணயத்தை அளவிட குறைவாக இருப்பதாக புகார் இருந்த வண்ணம் இருக்கிறது. தற்போது அதனை சரி செய்யும் விதமாக அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது இந்த பிரச்சனை சரி செய்ய அரசு புதிய வகை தராசுகளை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய வகை எலக்ட்ரானிக் தராசுகளில் அளக்கப்படும் அளவு உடனடியாக ரசீதாக வழங்கப்படும். இதன் மூலமாக எடை குறைவு பிரச்சினைகள் தடுக்கப்படும்.