கிருஷ்ணகிரி நகராட்சியில் கடந்த வாரம் மக்களுடன் முதல்வர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு நாட்களாக பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டது.

இதில் ஆக்கிரமிப்புகள், கட்டட வரைபட அனுமதி, பட்டா, தடையில்லா சான்று என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.

ஆனால் இந்த முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை அலுவலர்கள் பரிசீலிக்கவில்லை என்றும் அலட்சிய போக்குடன் நடந்து கொள்வதாகவும் மனுக்களை ஏற்காமல் நிராகரிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

30 நாட்களில் அரசு அலுவலர்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என்று அமைச்சர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு மக்களுடன் முதல்வர் என்ற பெயரில் அதிகாரிகள், அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி மட்டும்தான் நடந்துள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.