தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெற இதுவரை ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு செல்போன் வழியாக பதியப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட  தகவல்களை சரி பார்ப்பதற்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கள ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு சரியான தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த அனைவரும், மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருப்பது போல் காத்திருக்கிறார்கள் என சபாநாயகர் அப்பாவு கூறியது குறிப்பிடத்தக்கது.