தெலுங்கானா மாநிலத்தில் 55 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பல்வீந்தர் சிங் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் தொழிலதிபருக்கு தெரிய வந்ததால் அவர் தன் மகளை கண்டித்துள்ளார். ஆனால் அவருடைய மகள் தன் காதலனை அடிக்கடி சந்தித்து பேசியதோடு செல்போனிலும் தொடர்ந்து பேசினார். இதனால் அவர் தன் மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி விட்டார்.

இதனால் பல்வீந்தர் சிங் கோபமடைந்தார். அவர் ஆத்திரத்தில் ஒரு துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தொழிலதிபர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வருமாறு அழைத்த வாலிபர் அவரின் கண்ணில் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.